இன்றைய ராசி பலன் (28/12/2021)

மேஷம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பொருளாதார நிலையில் இருந்துவந்த தடை நீங்கும். நண்பர்கள் மூலம் நன்மை கிடைக்கும்.

ரிஷபம்

Advertisement

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும்.

கடகம்

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்ற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

சிம்மம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

கன்னி

தன்னம்பிக்கையும் துணிவும் அதிகரிக்கும். வீட்ற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் குறையலாம். பணிச்சுமை அதிகரிக்கும்.

துலாம்

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வீர்கள். முன்னேற்றம் கருதி எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடும். தந்தைவழி ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாக முடியும்.

விருச்சிகம்

வீடு இடம் வாங்குவது தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

தனுசு

திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். தொழில் முன்னேற்றம் கருதி புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

மகரம்

கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். சுப காரியங்கள் தடையின்றி நடக்கும். வியாபாரத்தில் நடந்த இழப்புகளை சரி செய்வீர்கள். கல்வி முன்னேற்றம் கருதி முயற்சி எடுப்பீர்கள்.

கும்பம்

செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்களும் அதிகரிக்கும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வீர்கள்.

மீனம்

சகோதர வழியில் உதவி கிடைக்கும். எதையும் தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள். உறவினர்கள் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புதிய முயற்சிகள் எடுப்பீர்கள்.