இன்றைய ராசிபலன் – 19-07-2020 (ஞாயிற்றுக்கிழமை)

மேஷம்

உங்கள் ஆற்றலை குறைக்கும் விதத்தில் மனதில் அவநம்பிக்கை உருவாகும். எனவே நீங்கள் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் உடல் ஆரோக்கிய குறைவு காரணமாக அந்த பணிகளை செய்வதில் தாமதம் உண்டாகலாம். அதிகமான கோபம் உங்கள் உறவை பாதிக்கும். எனவே அதனை தவிர்ப்பது நல்லது. பண வரவு குறைவாக இருக்கும் என்பதால் செலவு செய்வதில் கவனம் தேவை.

ரிஷபம்

Advertisement

இன்று நீங்கள் மன உறுதியோடு இருப்பீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும் வகையில் முடிவு எடுப்பீர்கள். இன்றைய நாளை உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உங்களுடை வேலையில் முன்னேற்றம் இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். அதனை உங்களுடைய சொந்த தேவைக்கு பயன்படுத்துவீர்கள். மன உறுதியும் நம்பிக்கையும் இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது.

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை குறித்த நேரத்தில் முடிப்பது கடினமாக இருக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு நல்ல பெயர் கிடைக்காமல் போகலாம். பிறரிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது.உங்கள் துணையிடம் சேர்ந்து மகிழ்ச்சியான நாளாக மாற்றுங்கள். குடும்ப பொறுப்புகள் அதிகம் இருப்பதால் செலவும் அதிகம் செய்ய நேரிடும். குடும்ப உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்

இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க இயலாத நிலை இருக்கும். பணிச்சுமை அதிகம் இருப்பதால் சக பணியாளர்களுடன் சில பிரச்சினைகள் காணப்படும். உங்கள் துணையுடன் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. அதிகமான செலவுகள் இருப்பதால் பிறரிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். தூக்கமின்மை காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். பயணங்களால் நல்ல மாற்றம் ஏற்படும். உங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் ஆரோக்கிய நலனில் உங்கள் துணை அக்கறை காட்டுவார். பண வரவு அதிகமாக இருக்கும். நகை மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். இன்று நீங்கள் ஆரோக்கியத்தோடும் மன தைரியத்தோடும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி

சிறிய முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்கள் திறமையை வெளிக்கொண்டுவரும் நாள். துணையிடம் அன்பாக பேசுவீர்கள். பணம் வரவு அதிகமாக காணப்படும் நாள். மனதில் தைரியம் திருப்தியும் தென்படும்.

துலாம்

சிறந்த வளர்ச்சி இருக்கும். பெரிய வெற்றி காண்பீர்கள். உங்கள் பாணியில் சிறப்பாக செயல்படுகிறார்கள். உங்கள் துணையுடன் நட்பாக இருப்பீர்கள். உங்களுக்கு வருமானம் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்

மன அழுத்தம் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. உங்களது வேலை சற்று கடினமாக இருக்கும். முட்டி செயல்படுவது நல்லது. துணையுடன் அவசரப்பட்டு வார்த்தைகளை விட வாய்ப்புண்டு. நிதானமாக இருப்பது நல்லது. பணத்தை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

தனுசு

இன்று சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உங்கள் துணையுடன் வீண் விவாதம் நடக்க வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருப்பது நல்லது.

மகரம்

இன்று வெற்றிகரமான நாள் அனைத்து செயல்களும் உங்களுக்கு சாதகமாகவே அமையும். உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகம் உண்டு. உங்களது ஆரோக்கியம் மேலோங்கியிருக்கும்.

கும்பம்

உங்கள் இலட்சியங்களை அடைவதற்கு உகந்த நாள். சில செயல்களில் வெற்றி பெறுவீர்கள். கடினமான பணிகளை கூட மிக இலகுவாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் கையில் அதிகமாக பணம் புழங்கும், ஆகையால் பணத்தை சரியான முறையில் செலவு செய்வது நல்லது. ஆரோக்கியமான நாள் இன்று.

மீனம்

இன்று சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆகையால் வேலையை திட்டமிட்டு செய்வது நல்லது. உங்கள் துணையுடன் சுமுகமான நிலை ஏற்படாது. துணையிடம் இனிமையான வார்த்தைகளை பேசுவது நல்லது. பயணத்தால் பணத்தை இழக்கும் வாய்ப்புண்டு. பணத்தை செலவு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.