இன்றைய ராசிபலன் – 21-07-2020 (செவ்வாய் கிழமை)

மேஷம்

இன்று உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்ப பிரச்சனை காரணமாக உறவுகளில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் காரணமாக பணத்தை செலவு செய்ய நேரிடும்.

ரிஷபம்

Advertisement

இன்று நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். கடின உழைப்பின் மூலமாக உங்கள் திறமையை நிரூபித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தொலைதூரத்திலிருந்து பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தைரியமும் தெளிவான மனநிலையும் இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் மந்தமான நிலையை உணர்வீர்கள். பணிச்சுமை அதிகம் இருப்பதாக தோன்றும். திட்டமிட்டு கடுமையாக பணியாற்றினால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு மேம்படும். பணத்தை கவனமாக செலவு செய்யுங்கள். கண் எரிச்சல், முதுகு வலி, கால் வலி போன்ற சிறுசிறு பிரச்சினைகள் உருவாகலாம்.

கடகம்

இன்று நீங்கள் பதட்டமாகவே காணப்படுவீர்கள். அதிக பொறுப்புகள் உண்டாகும். பணி நிமித்தமாக பயணம் செய்ய வாய்ப்புள்ளது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். வீட்டுத் தேவைக்காக பணம் செலவு செய்ய நேரிடும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று நீங்கள் சிறிய பிரச்சனைகளை சரி செய்ய கடினமான முயற்சிகள் எடுப்பீர்கள். பணிச்சுமை அதிகம் இருப்பதால் அதனை திட்டமிட்டு செய்ய வேண்டும். குடும்ப உறவுகளில் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் உரையாடும்போது கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். ஆரோக்கியத்தில் பல்வலி, செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி

இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணிகளை குறைந்த நேரத்தில் விரைவாக செய்து முடிப்பீர்கள். உங்களின் நல்ல அணுகுமுறையால் குடும்பத்தில் நல்லுறவு மேம்படும். இன்று பணவரவு அதிகம் இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

துலாம்

உங்களின் கடின உழைப்பு மூலம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். வேலை காரணமாக பயணம் செய்ய நேரிடும். பங்குவர்த்தகத்தில் அதிக லாபம் ஏற்படும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

உங்கள் வேலைகளை முறையாக திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்கள் பணிகளை பொறுமையாக செய்து முடிப்பீர்கள். பணியில் சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக செலவுகள் ஏற்படலாம். எனவே பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். தேவையற்ற கவலைகளால் நீங்கள் தூக்கத்தை இழப்பீர்கள். எனவே தேவையற்ற கவலைகளை தவிர்ப்பது நல்லது.

தனுசு

கவனக்குறைவு காரணமாக பணத்தை இழக்க நேரலாம். இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு கடினமான முயற்சிகள் எடுக்க வேண்டும். உங்கள் பணிகளை செய்வதற்கு முன்பு இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். இதனால் உங்களுக்கு வெற்றியும் நல்ல பெயரும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் உடல் உபாதைகள் காய்ச்சல் ஏற்படலாம்.

மகரம்

இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல பலனை தரும். தைரியமாக இருப்பீர்கள். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நீடிக்கும். உங்களின் உழைப்பிற்கு கூடுதல் பணம் கிடைக்கும். இன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் வெற்றி கிடைக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். குடும்ப உறவு, பணவரவு, ஆரோக்கியம் அனைத்தும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மீனம்

இன்று நீங்கள் கடினமான பணிகளை மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். அதே நேரத்தில் பணிகளை சிறந்த முறையில் திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்கள் சொந்த கருத்துக்களை தவிர்ப்பது குடும்பத்திற்கு நல்லது. எதிர்காலத் தேவைக்காக பணத்தை சேமிக்க வேண்டும்.