இன்றைய ராசி பலன் (திங்கள் கிழமை) 27-07-2020

today-rasi-palan-27-07-2020

மேஷம்

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாள். உங்களது செயல்களை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களிடம் மறைந்து இருக்கும் திறமைகளை பயன்படுத்தினால் மனத் திருப்தி கிடைக்கும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. புதிய முதலீடுகள் குறித்து இன்று நீங்கள் முடிவு எடுக்கலாம். ஆரோக்கியமாக இருப்பீர்கள். சிறிது கை கால் வலி வர வாய்ப்புண்டு உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்

இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. அதனால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். இன்று உங்களை மேம்படுத்தி கொள்ளும் வகையில் பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் பேசும்போது சற்று நிதானமாக பேசுவது நல்லது. அதிக பணம் செலவாக வாய்ப்புள்ளதால் பணவிஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

மனதில் தெளிவு வேண்டும். எது நடந்தாலும் எதிர்கொள்ளுங்கள். சற்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது மனதிற்கு ஆறுதல் தரும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்பட வாய்ப்புண்டு. நிதானமாக இருப்பது உறவுக்கு நல்லது. கையில் இருக்கும் பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். அவர்களின் உணவில் கவனம் கொள்ளுங்கள்.

கடகம்

தேவையற்ற எண்ணங்கள் மனதில் உருவாக வாய்ப்பு உண்டு. பிரார்த்தனை மேற்கொண்டால் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கலாம். திட்டமிட்டு வேலை செய்தால் சிறப்பான வேலை உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையுடன் நல்ல பிணைப்பு ஏற்படும். துணையுடன் பேசும்போது கவனம் தேவை. பண வரவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பணத்தை சிறப்பாக கையாளுவது நல்லது. கால்வலி கண்ணெரிச்சல் போன்றவை உருவாக வாய்ப்புண்டு. மருத்துவரை கலந்தாலோசித்து மருந்து எடுப்பது நல்லது.

சிம்மம்

சரியாக திட்டமிட்டால் இன்று வளர்ச்சி காணும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புண்டு. உங்களது வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சி பெருகும் நாள். உங்களிடம் ஆரோக்கியமான எண்ணம் காணப்படும்.

கன்னி

ஆன்மீக செயலில் ஈடுபட்டால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். கவனமுடன் செயல்பட்டால் சிறப்பாக பணியாற்ற முடியும். துணையுடன் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. செலவுகள் அதிகம் இருக்கும் நாள். செலவுகள் குறித்து நிதானமாக இருப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்

தடைகள் ஏற்பட்டாலும் மன தைரியத்தின் மூலம் வெற்றி காண்பீர்கள். அதிஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புங்கள் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். துணையுடன் உறவின் மதிப்பைப் பற்றி பேசுவது நல்லது. இன்று வழக்கத்தை விட செலவு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. நிதானமாக இருப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. குறைந்தபட்சம் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்

ஆன்மீகம் நாட்டம் அதிகமாக இருக்கும். மனம் அமைதி பெறும். உங்களது பணியை கவனமுடன் செய்வது நல்லது. பணி சுமை அதிகமாக இருக்கும் காரணத்தினால் பதட்டம் ஏற்பட வாய்ப்புண்டு. அமைதியாக இருப்பது நல்லது. துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். உறவை வலுப்படுத்தும். அதிக பொறுப்புகள் காரணமாக செலவுகள் வர வாய்ப்புண்டு. நிதானமாக செலவு செய்வது நல்லது. பதட்டப்படாமல் இருங்கள். தேவைப்படும் பொழுது சற்று ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.

தனுசு

ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன அமைதியைத் தரும். விரும்பிய இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்வது அவசியம். புதிய பணிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணம் வரவு அதிகமாக இருக்கும். தேவையான விசயத்தில் செலவு செய்வது நல்லது. இன்று நல்ல ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மகரம்

உற்சாகமான நாள். மனது திருப்தியாக இருக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் உங்களை மகிழ்விக்கும். உங்கள் துணையுடன் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஒன்றாக செலவு செய்து துணையின் அன்பை பெறுவீர்கள். பணம் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. அதேபோல் சேமிப்பும் உயர வாய்ப்புண்டு. பதட்டப்படாமல் எந்த விஷயத்தையும் அணுகினால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

கும்பம்

ஏழைகளுக்கு உணவு அல்லது பணம் கொடுங்கள். வேலைகளில் சில சோதனைகள் வரும். நிதானமாக வேலையை முடிப்பது நல்லது. உங்களது துணையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களது துணைக்கு ஆதரவாக இருங்கள். பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள். இன்று முடிந்தவரை அமைதியாக இருப்பது நல்லது.

மீனம்

முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டாம். நிதானமாக எடுப்பது நல்லது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதற்கு வருந்தாமல் எப்படி சிறப்பாக பணியாற்றுவது என்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணம் சம்பந்தமாக நிதானம் தேவை. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.