இன்றைய ராசி பலன்கள் 24-07-2020 (வெள்ளிக்கிழமை)

மேஷம்

எந்த வேலையும் செய்வதற்கு முன் திட்டமிட்டு செய்ய வேண்டும். பணிச்சுமைகள் இருப்பதால் மாறுபட்ட மனநிலையில் இருப்பீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். உணவில் கவனம் செலுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

ரிஷிபம்

Advertisement

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. உங்கள் வேலைகளில் தவறுகள் நடக்கலாம். மன உறுதியோடும் கவனமோடும் வேலை செய்ய வேண்டும். உங்களுடைய அன்பான வார்த்தைகளால் குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். பணவரவு எதிர்ப்பார்த்த படி கிடைக்காது.

மிதுனம்

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். உங்களின் கடின உழைப்பு நல்ல பலனை தரும். குடும்பத்தாரிடம் நல்ல அணுகுமுறை ஏற்படும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் அமைதியாக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளுங்கள். பணவரவு மற்றும் செலவு சேர்ந்தே காணப்படும். உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவழிக்க நேரிடும்.

சிம்மம்

உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க நல்ல மனநிலையை மேற்கொள்ளுங்கள். பணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். வெளியில் அதிகம் சுற்றுவதை தவிர்க்கவும்.

கன்னி

இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு ஏற்படும். பணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய வாய்ப்புள்ளது.

துலாம்

இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

விருச்சிகம்

இன்று உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்கள் வேலைகளை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு அதிகம் காணப்படும். கூடுதல் பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்று நீங்கள் பதட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் செய்யும் வேலைகள் தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். பணவரவு அதிகம் இருக்காது. கால் வலி அல்லது தொடை வலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயலில் கவனத்தோடு இருக்க வேண்டும். பணியின்போது இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெரிய அளவிலான கொள்முதல் செய்வதை தவிர்ப்பது நல்லது. செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகலாம். அதனை தடுக்க ஆரோக்கியமான உணவுகள் உண்ண வேண்டும்.

கும்பம்

இன்று நீங்கள் தைரியமாகவும் உறுதியாகவும் இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். சக பணியாளர்களிடம் நட்பு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிக அளவில் இருக்கும்.

மீனம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு அதிகம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.