நெல்லை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.