தக்காளி ரசம் இப்படி செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்

தக்காளி பழம் – 3
பெரிய வெங்காயம் – 1
துவரம்பருப்பு – கால் கப்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 8 பல்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 4
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை & கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு & எண்ணெய் – தேவையான அளவு

tomato rasam recipe in tamil

செய்முறை

Advertisement

துவரம் பருப்பை நன்கு குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
மிக்ஸியில் கசகசா, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, பூண்டு பல், சோம்பு ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த துவரம் பருப்பு, தக்காளி, உப்பு, கொத்தமல்லி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு குழைய வேக விடவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்கு தாளித்து கொள்ளவும்.பிறகு நறுக்கிய வெங்காயம், அரைத்து வைத்த மசாலா போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு வேக வைத்த துவரம் பருப்பை ஊற்றி தேவைக்கு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.