தக்காளி விலை கடும் சரிவு : கிலோ எவ்வளவு தெரியுமா?

வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

tomato price in chennai

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு பெட்டியாக வாங்கினால் 30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும். தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா கர்நாடக மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 850 டன் தக்காளி வந்துள்ள நிலையில் வியாபாரம் இன்று களைகட்ட தொடங்கியுள்ளது.

Advertisement