உடற்பயிற்சி அதிகமாக செய்தால் என்னவாகும்?

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் இது வாழ்க்கையின் எல்லா விஷயங்களும் பொருந்தக்கூடிய பழமொழியாகும் அதேபோல் உடற்பயிற்சி அதிகமாக செய்தால் என்ன நடக்கும்.?

முதலில் ஏற்படுவது களைப்பு, இந்த களைப்பு சோர்வு தரும், ஓய்வெடுக்க தூண்டும், ஓய்வெடுக்கும் பொழுது உடலில் சோம்பேறித்தனம் கூடுதலாக சேர்ந்து கொள்கிறது.

சோம்பல் அதிகமானாலும் மூளைக்கு அதிக வேலை இருக்காது. மேலும், கடுமையான நீண்ட நேர உடற்பயிற்சிக்கு பின்பு மூளைக்கு அதிக இரத்தம் செல்கிறது. இதனால் தலைவலி ஏற்படும்.

Advertisement

மூளைக்கு அதிக ரத்தம் செல்வதால் கண் எரிச்சல் ஏற்படும், உடற்பயிற்சி செய்து முடித்த பின்பும் கூட கண்கள் எரிச்சல் அடைய ஆரம்பிக்கும். இது சில நேரங்களில் கண்கள் சம்பந்தமான பிரச்சனை உருவாக வாய்ப்புண்டு.

எனவே ஒரே நேரத்தில் அதிகமாக உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து அதிகபட்சமாக காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கும். மேலும், தினமும் 30 முதல் 40 நிமிட உடற்பயிற்சி ஆரோக்கியமானது.