நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் எடுத்த கொரோனா பரிசோதனைகள் எவ்வளவு? – ஐசிஎம்ஆர் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 41,03,233 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாக ஐசிஎம்ஆர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.குறிப்பாக 24 மணிநேரத்தில் மட்டும் 1,37,158 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. இருந்தாலும், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம், இரண்டாம் இடத்தில் தமிழகம் இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 11,094 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Corona Virus tamil news

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 41,03,233 மாதிரிகள் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 24 மணிநேரத்தில் மட்டும் 1,37,158 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

Advertisement