சென்னை மாநகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்காமல் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

