திருநங்கைகளுக்கு லிப்ட் கொடுத்த தொழிலதிபர்..! இறுதியில் நேர்ந்த அவலம்..!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ரகுமான். கட்டிட கலை நிபுணரான இவர், பணி காரணமாக சத்தியமங்கலம் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது, இரண்டு திருநங்கைகள், பேருந்தை தவறிவிட்டதா கூறி லிப்ட் கேட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் காரில் ஏற்றிக்கொண்டு ரகுமான் வந்துக்கொண்டிருந்தார்.

திடீரென, ரகுமானிடம் இருந்த பணத்தை அவர்கள் 2 பேரும் திருட முயற்சி செய்துள்ளனர். பின்னர், அவர்களிடம் தப்பிச்சென்ற ரகுமான், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த இரண்டு திருநங்கைகளையும் கைது செய்தனர்.

Advertisement