அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் பத்திரிக்கை அடித்து திருமணம் நடத்திய மக்கள்

ஆரணி அருகே உள்ள நரியம்பேட்டை கிராமத்தில் மிக பழமைவாய்ந்த ஸ்ரீ தஞ்சியம்மன் ஆலயம் உள்ளது. 

10 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ஒன்று கட்டுவதற்காக மரங்களை அழிக்க முயன்றனர். அப்போது பெண் ஒருவர் மீது சாமி வந்து வேப்பமரமும் அரசமரமும் ஒன்றாக வளர்வதால் அதனை அழிக்க கூடாது. அரச மரம் உலகத்தை காக்கும் சிவன் என்றும் வேப்பம் மரம் சக்தி என்றும் அந்த பெண் கூறினார். இதனையடுத்து அம்மரங்களை பொதுமக்கள் பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெண் ஒருவருக்கு அருள் வந்து, இரு மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பத்திரிக்கை அடித்து ஆலய வளாகத்திலேயே சீர்வரிசைகள் நிரம்ப திருமணம் முடித்து வைத்தனர்.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உலக அமைதிக்காகவும் வேப்பமரம் மற்றும் அரசமரத்தை அலங்கரித்து புத்தாடை அணிவித்து நூதன முறையில் கிராம பொதுமக்கள் திருமணம் செய்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளன.