Search
Search

லியோ முடிந்த கையேடு அடுத்த ப்ராஜெக்ட் ரெடி.. “குந்தவையின்” அடுத்த மூவ் இதுதானா?

சாமி என்ற திரைப்படத்தில் புவனா, கில்லியில் தனலட்சுமி, விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் ஜெசி, 96 படத்தில் ஜானு தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை இளைய பிரட்டி என்று சுமார் 24 ஆண்டுகளாக தன் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஒரு சூப்பர் ஹிட் நடிகை தான் த்ரிஷா.

தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அந்த கதாபாத்திரமாக தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு மாபெரும் சக்தி த்ரிஷாவுக்கு உண்டு. 90ஸ் கிட்ஸ் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்த இவர், பொன்னியின் செல்வன் 2 படத்தின் அகநக பாடலை பார்த்த இக்கால ரசிகர்களுக்கும் கனவுக்கன்னியாக மாறியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் அவர்களுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சிகரம் தொடு படத்தை இயக்கிய கௌரவ் நாராயணன் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

முதன்மை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க, தென்னகத்தின் மூன்று முக்கிய கலைஞர்கள் இந்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தற்காலிகமாக கொலைவழக்கு என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

You May Also Like