தாம்பரம் அருகே லாரி டயர் வெடித்து ஒருவர் பலி

தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்( 40) என்பவர் டயருக்கு பஞ்சர் போடும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இன்று காலை பிரகாஷ் லாரி டயர் ஒன்றுக்கு பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டயரில் காற்று அதிக அளவில் பிடித்ததால் அந்த டயர் திடீரென வெடித்து சிதறியது. இதில் பிரகாஷ் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டார்.

இதில் பிரகாஷ் ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் தாம்பரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.