செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளை தீயிட்டுக்கொளுத்திய தந்தை

மும்பையில் கிழக்கு விரார் பகுதியைச் சேர்ந்த முகமது முர்திஸா மன்சூரி. இவருக்கு சாகிஷ்டா என்ற 16 வயது மகளும் உண்டு.

இவர் புத்தாண்டு தினமான நேற்று மதியம் தனது 16 மகளுக்கு உணவு கொடுப்பதற்காக அவரது அறைக்கு சென்றார். அங்கு அவருடைய மகள் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

Advertisement

யாரோ ஆண் நண்பருடன் தான் தனது மகள் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என தவறாக நினைத்த மன்சூரி, செல்போனை பறித்து தரையில் போட்டு உடைத்தார்.  பிறகு அங்கிருந்த மண்ணென்னை கேனை எடுத்து வந்து அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டார்.

உடனே அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து சாகிஷ்டாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் 70% தீக்காயத்துடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து சாகிஷ்டாவின் தந்தை முகமது முர்திஸா மன்சூரி மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டு அவரை போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.