ஒரே நாளில் வெளியாகும் சமுத்திரக்கனியின் இரண்டு படங்கள்

சமுத்திரக்கனி ஒரு நடிகராக நல்ல வரவேற்பும் மார்க்கெட்டும் இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தர இயக்குனர்கள் தயாராக இருக்கின்றனர்.

கடந்த மாதம் வெளியான பீம்லா நாயக், ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களில் கூட முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். அதே போல தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் சமுத்திரக்கனி நடித்துள்ள முக்கியமான இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன.