உலக நாயகனுக்கு நன்றி சொன்ன சங்கர்.. ஒரே நேரத்தில் வெளியான 2 அப்டேட்!

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கமலஹாசன் நடித்து, சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து பல தடைகளை சந்தித்து வந்தது இந்நிலையில் பெருந்தொற்றுக்கு பிறகு பரபரப்பாக இப்பொது படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
இந்தியன் 2 படப்பிடிப்பு Taipei நாட்டில் நடந்து வந்தது, அதன் பிறகு தென்னாப்பிரிக்கா நாட்டில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடந்து வந்த அந்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது.
இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார், அடுத்தபடியாக மே மாதம் அடுத்த கட்ட படபிடிப்பு துவங்கும் என்றும், தன்னுடைய ஈடு இணையற்ற ஒத்துழைப்புக்கு கமல் அவர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகும் Game Changer படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் மே மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கும் முன் Game Changer பட கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.