ஒரே பாலினத்தவர் திருமணம்..? வந்து விட்டது மதுரையில்.. வியப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி..!

மதுரையில் இரண்டு இளம்பெண்கள் முதலில் தோழிகளாக பழகி வந்தனர், இந்நிலையில் சில நாட்களுக்கு பின் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தனர்.

அதன் பின் இருவரும் இணைந்து வாழ முடிவு செய்து, தங்களுடைய பெற்றோர்களிடத்தில் தங்கள் முடிவுகளை சொல்லியுள்ளார்கள்,  இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இரு வீட்டு பெற்றோர்களும், இருவரின் முடிவுக்கும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் மதுரையில் இருந்து சென்னை வந்த இரு பெண்களும் ஒரு தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கியுள்ளனர். மேலும் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ஒன்றும் போட்டுள்ளனர்.

அவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, வழக்கு தொடர்புடைய நபர்கள், காவலர்கள் என அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

அதன் பின் இது தொடர்பாக பேசிய நீதிபதி,  ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது தொடர்பான வழக்குகளுக்கு இந்திய மற்றும் சர்வதேச நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்.

மேலும் பெற்றோர்களின் கருத்துகள் மற்றும் உளவியல் கருத்துகளை பெற வேண்டியது அவசியமாக இருக்கிறது என்று கூறினார், மேலும் உளவியல் நிபுணர் ஒருவரை நியமித்து, இந்த விவகாரம் தொடர்பாக உளவியல் ரீதியாக அணுகி அதன் அறிக்கை ஏப்ரல் 26ல் தாக்க செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.