சார்பட்டா படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து

நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மொத்த படக்குழுனரையும் பாராட்டியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் “சார்பட்டா பரம்பரை பாக்ஸிங் குழுவினர் நெருக்கடி நிலைக்குறித்தும் கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது” என கூறியுள்ளார்.

கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யாவுக்கும், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி சாருக்கும் ஜான் கொக்கன், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement