மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் பற்றி பேசிய உதயநிதி

உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மனிதன், சைக்கோ, கண்ணே கலைமானே போன்ற உதயநிதியின் தரமான படங்கள் வரிசையில் தற்போது நெஞ்சுக்கு நீதி படமும் இணைந்துள்ளது.

உதயநிதி தற்போது பல படங்களின் விநியோகஸ்தர் உரிமையை வாங்கி வெளியிட்டு வருகிறார். உலகநாயகன் கமலஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தையும் உதயநிதி வாங்கி உள்ளார்.

Advertisement

நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முதல்முறையாக உதயநிதியுடன் சேர்ந்து நடிக்க உள்ளார். இதுபற்றி உதயநிதி பேசியபோது வடிவேலுவின் கதாபாத்திரம் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக இருக்கும் என கூறி உள்ளார்.

வடிவேலுவுக்கு கதையும் கதாபாத்திரமும் பிடித்து போனதால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாக உதயநிதி தெரிவித்துள்ளார்.