Search
Search

வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளியாவதில் பிரச்சனையா? – உதயநிதி கொடுத்த விளக்கம்

‘மீகாமன்’, ‘தடம்’ ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மகிழ் திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கலகத் தலைவன்’ படத்தை இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இப்படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அதே நாளில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெளியாகிறது.

இதுகுறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் திரையில் நேருக்கு நேர் மோதிக் கொள்வது புதிதல்ல. வாரிசு, துணிவு திரைப்படங்கள், பொங்கல் தினத்தில் வெளியாவது பிரச்சினையாக இருக்காது. மேலும் இரண்டு திரைப்படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

You May Also Like