திராட்சைப் பழங்களை விட உலர் திராட்சையில் அதிகமான சத்துக்களும் பலன்களும் உள்ளது.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த உலர் திராட்சை. இதில் வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து, சுக்ரோஸ், ப்ரக்டோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
ரத்தசோகை
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை குணமாகும். மேலும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.
ஜீரண சக்தி
உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்கும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல மருந்தாக பயன்படும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.
சரும பாதுகாப்பு
உலர் திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்தில் இருக்கும் செல்களில் அழிவை கட்டுப்படுத்தும். இதனால் முதுமை தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகள் இருக்காது.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் காமாலை நோய் குணமாகும்.
உடல் எடை அதிகரிக்க
உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் உலர்திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, இந்த உலர்திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.