in

அக்குள் பகுதியை அழகாக வைக்க சில டிப்ஸ்

சில பெண்களுக்கு அக்குள் பகுதி கருப்பாக இருப்பதால் அவர்களால் அவர்கள் விரும்பும் ஆடையை அணியமுடியாது. குறிப்பாக ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அவர்களால் அணிந்து கொள்ள முடியாது. அக்குள் பகுதியில் உள்ள கருமையை நீக்கி அதனை அழகுபடுத்த உங்களுக்கான சில டிப்ஸ் என்ன என்பதை பார்ப்போம்.

அக்குள் பகுதியில் உள்ள முடியை அகற்ற வேண்டும். ஷேவிங் செய்வதற்கு பதிலாக வேக்சிங் செய்யலாம்.

எலுமிச்சை

தினமும் குளிப்பதற்கு முன் எலுமிச்சை பழத்தை அக்குள் பகுதியில் தேய்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து குளிக்கவும். இதனை தொடர்ந்து செய்துவந்தால் விரைவில் கருமை நீங்கும்.

ஆலிவ் எண்ணெய்

சருமத்தை பாதுகாத்து அழகை கொடுப்பதில் ஆலிவ் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் பழுப்பு சர்க்கரை கலந்து அதனை தடவ வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவவும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

இறந்த செல்களை நீக்கும் சக்தி ஆப்பிள் சீடர் வினிகருக்கு உள்ளது. இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் வினிகர் கலந்து தடவவும். ஐந்து நிமிடங்கள் விட்டுவிட்டு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் அக்குள் பகுதியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மஜாஜ் செய்யவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து சாதாரணதண்ணீரில் கழுவி வந்தால் கருமை விரைவில் நீங்கும்.

மஞ்சள்

எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து பேஸ்ட் போன்று தயாரித்து அதனை உங்கள் அக்குள் பகுதியில் தடவவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.