தடுப்பூசி போட பயந்து ஆற்றில் குதித்த மக்கள். எங்க நடந்தது தெரியுமா?

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்புபூசி மருந்துகளை பயன்படுத்தி கொரோனா தொற்றை தடுக்க மத்தியஅரசு அறிவுறுத்தி வருகிறது.

அரசு எடுத்த வந்த பல்வேறு நடவடிக்கை காரணமாக மக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திர பிரதேசம் பாராபன்கி மாவட்டத்தில் உள்ள சிசவ்டா என்ற கிராமத்தில் ஆயிரத்து ஐநூறு பேர் வசித்து வருகின்றனர். தடுப்பூசி போடுவதற்காக அதிகாரிகள் குழு சென்றது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாத கிராமத்தினர் 200 பேர் வரையில் வீட்டை வீட்டுவெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. தடுப்பூசி குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் இதனை ஏற்றுகொள்ளாத மக்கள் அருகே சென்று கொண்டிருந்த ஆற்றில் குதித்து தலைமறைவாகினர்.

Advertisement

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சரியான விழிப்புணர்வு இல்லை. அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பூசி போடப்படும் என கூறினார்கள்.

ஒரு தடுப்பூசியை பார்த்து கிராம மக்கள் ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.