டிஜிட்டல் வாலட் இருக்கா..? உஷார்.. ஓர் அதிர்ச்சி தகவல்

டிஜிட்டல் வாலட்டில் பணப் பரிவர்த்தணைகளை பலர் செய்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை செயலி தான் மொபிக்விக். இது பணப் பரிவர்த்தனைக்கான செயலி. இதனை இந்தியாவில் பல பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இணையதள ஆராய்ச்சியாளர்கள் சிலர், இந்த செயலி பயன்படுத்துபவர்களின், விவரங்கள் அனைத்தும் டார்க் வெப்சைட்டில் விற்பனை செய்யப்படுவதாக தற்போது ஓர் புகார் எழுந்துள்ளது.
இதற்கு முன்னர் வேறு பல இணைய ஆராய்ச்சியாளர்கள், மொபிக்விக் நிறுவனம் சுமார் 11 கோடி இந்தியர்களின் தொலைப்பேசி எண், வங்கி கணக்கு, ஆதார் அட்டை போன்ற விவரங்கள் கசிந்துள்ளனர், என்று கூறியுள்ளனர்.
ஆனால் தற்போது 35 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் அடங்கிய டேட்டா பேஸ் டார்க் வெப்பில் வெளியாகியுள்ளது என்று இணைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மொபிக்விக் நிறுவனம் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் வாடிக்கையாளர்களின் தகவல் கசியவில்லை, எங்களுக்கு தெரியாமல் வாடிக்கையாளர்களின் தகவல் வெளியே போக வாய்ப்பில்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தில் உள்ளனர்.