இஞ்சியைத் தோல் சீவி அரைத்து வடிகட்டி அதில் சர்க்கரை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.மேலும் நல்ல செரிமானம் ஆகும்.
சாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதி கஞ்சியில் பனங்கற்கண்டு, வெண்ணை அல்லது நெய் சேர்த்து சூடாக குடித்தால் தொண்டை வலி, தொண்டை புண் குணமாகும். அல்லது தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம்.
சுண்டைக்காயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் இருமல் குணமாகும். அல்லது பாலில் 6 பேரிச்சம் பழத்தை வேக வைத்து சாப்பிடலாம்.
வாழைப் பழத்தோடு ஏலக்காய் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வர, அதிக உதிரப்போக்கு பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.
தூதுவளையை மைபோல அரைத்து, நெல்லி அளவு எடுத்து பசும் பாலில் கலந்து, காலை மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட, 15 நாட்களில் கை நடுக்கம் சரியாகும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
பாசிப்பயறு, பூண்டு, வெந்தயம், அரிசி, சீரகம் போட்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகும்.
எலுமிச்சை சாறை முகத்தில், தடவி அரை மணி நேரம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் கழுவினால் முகப்பரு நீங்கும்.
வெறும் வயிற்றில் கொத்துமல்லி சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாறு கலந்து மெதுவாக குடித்தால் செரிமானச் சிக்கல் தீரும். இதில் சர்க்கரை, உப்பு எதுவும் சேர்க்கக்கூடாது.