இரவு நேரங்களில் செல்போன் பயன்பாடு..! திருமணம் செய்யும் ஆண்களே உஷார்..!

இரவு நேரங்களில் சரியாக தூங்காமல், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கானது. கட்டுரையின் முழு விளக்கத்தையும், இறுதி வரை படிக்கவும்.

செல்போன் பயன்பாடு:

உலகத்தின் நவீனமயமாக்கலின் மூலமாக, மக்கள் பெருமளவில் நன்மைகளை பெற்றுள்ளனர். குறிப்பாக, ஸ்மார்ட் போன்களின் உருவாக்கத்தை கூறலாம். ஒரே இடத்தில் இருந்துக் கொண்டு, எந்த வேலைகளை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நிலையை ஸ்மார்ட் போன்களே உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார் போன்களின் பயன்பாடு, ஒரு கட்டத்திற்கு மேல் பலருக்கும் போதையாக மாறிவிடுகிறது. இதன் நீட்சியாக பலரும், பலவித பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்னொரு ஆய்வு நம்மை பெரும் அச்சத்திற்கு ஆளாக்;குகிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

ஆய்வு:

விர்ச்சுவல் ஸ்லீப் 2020 என்ற கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் செல்போன், டேப்லெட், மடிக்கணினி ஆகியவற்றை இரவில் நீண்ட நேரம் பயன்படுத்துவது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பான ஆய்வின் தகவல்கள் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வின் படி, இரவு நேரங்களில் அதிகமாக கேட்ஜெட்களை பயன்படுத்தும் ஆண்களுக்கு, விந்தனுக்களின் எண்ணிக்கையும், அதன் வலிமையும் குறைவதாக தெரியவந்துள்ளது. அதாவது, கேட்ஜெட்களில் இருந்து வெளிப்படு நீல நிற ஒளி, தூக்கத்தை கெடுப்பது மட்டுமின்றி, மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வின் வழியாக தெரியவந்துள்ளது. செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்து அல்லது கருமுட்டையை பாதிக்கும் என்று அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மலட்டுத்தன்மை:

உலக சுகாதார அமைப்பு கூறியதன் அடிப்படையில், உலகம் முழுவதும் 15-ல் இருந்து 20 சதவீதமாக உள்ளதாம். இதில், பாதிக்கு பாதி, ஆண்கள் தான் பாதிக்கப்படுகிறார்களாம். இந்திய அளவில் பார்க்கும் போது, 25 சதவீத ஆண்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இவற்றிற்கு செல்போன் மற்றும் கேட்ஜெட்களின் பயன்பாடு, மிகமுக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வு கேட்ஜெட்களை பயன்படுத்தவே கூடாது என்பதை கூறவில்லை. அதன் பயன்படுத்தும் நேரத்தையும், அதனை இரவில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றே கூற வருகிறது.