“நாளைக்கு வேற எடுப்போம்”.. மாமன்னன் ஷூட்டிங் – பாஹத் பாசிலை கலாய்த்த உதயநிதி

மாமன்னன், வெகு நேர்த்தியாக உருவாகி வரும் ஒரு சிறப்பான திரைப்படம். சில ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு இந்த திரைப்படம் தற்போது வெகு விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. பிரபல இயக்குநர் மாறி செல்வராஜ் இந்த படத்தை இயக்கி வருகின்றார்.
உதயநிதி ஸ்டாலின், பாஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் மிக கனமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகின்றார் வைகை புயல் வடிவேலு அவர்கள்.
இந்நிலையில் இந்த படம் உருவாகும் விதத்தை குறித்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த நாயகன் உதயநிதி “இந்த படத்தின் மூலம் பாஹத் மற்றும் மாறி செல்வராஜ் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள்”. “ஏற்கனவே மாறி 50 டேக் போனாலும் தான் விரும்பியது வரும் வரை ரீ டேக் கேட்பார், இதில் பாஹத் வேற, மானிடர் பார்த்துவிட்டு, மாறி இது வேண்டாம் நாளைக்கு நாம வேற எடுப்போம் என்று கூறுவார் என்று சொல்லி அவரை கலாய்த்துள்ளார்”
மிக பெரிய பிரபலஙகள் பலர் ஒன்றிணைந்து இந்த படத்தில் நடித்து வருவது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.