வாழ் (Vaazhl) திரை விமர்சனம்

அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் தற்போது வாழ் படத்தை எழுதி இயக்கியுள்ளார். பிரதீப், டி.ஜே.பானு, திவா தவான், அஹ்ரவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். SonyLIV OTT யில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.

vaazhl tamil review

பிரதீப் அந்தோணி ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவர் மன அழுத்தத்துடன் கூடிய ஐ.டி வேலையில் பணிபுரிகிறார். அவரைச் சுற்றியுள்ள அனைத்தும் அவரை மிகவும் எரிச்சலூட்டுகின்றன.

Advertisement

இப்படி ஒரு மிஷின் வாழ்க்கையில் வாழும் நாயகன் ப்ரதீப் ஒரு நாள் அவரே எதிர்ப்பார்க்காத ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களே இப்படத்தின் கதை.

இது ஒரு ட்ராவல் கதை என்றாலும் அதை நம் தமிழுக்கு ஏற்றது போல இயக்கி இருப்பது அருமை. படத்தின் நாயகன் ப்ரதீப் அவரின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும்தான். ஹீரோவுடன் சேர்ந்து நாமும் பயணிப்பது போல ஒளிப்பதிவு உள்ளது. படத்தின் வசனங்கள் மேலும் வலுவூட்டுகிறது.

இரண்டாம் பாதியில் அழுத்தமான காட்சிகள் இல்லாதது சுவாரஸ்யத்தை குறைக்கிறது.