வெள்ளை சட்டையில் வடிவேலு.. மே 1 அன்று வெளியாகும் First Look – வைகை புயல் பராக்!

பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகரும், அரசியல் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தான் மாமன்னன். சில தினங்களுக்கு முன்பு இந்த படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அவர் பேசுகையில், இந்த படத்தில் நானும் கீர்த்தியும் மிக நேர்த்தியாக நடித்திருந்தாலும், குழந்தைகளே சற்று ஓரமாக உட்காருங்கள் நானும் நடிக்கிறேன் என்று கூறி, இந்த படத்திற்கு என்று மிக மிக சிறத்தை எடுத்து வடிவேலு அவர்கள் நடித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் நிச்சயம் இந்த படத்திற்காக வடிவேலு அவர்களுக்கு விருதுகள் கிடைக்கும் என்றும் அவர் உறுதிபட கூறி இருந்தார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி, அதாவது நாளை இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.
மேலும் இப்பொது இந்த படத்தில் இருந்து ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது, அதில் வெள்ளை ஆடையில் வடிவேலு அவர்களும், எதிரே கோட் சூட் அணிந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களும் நிற்க, இருவருடைய நிழலில் உள்ள தலை ஒன்றாக தோன்றும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகையால் ஒரு அரசியல்வாதியும், அரசு அதிகாரியும் இணைந்து செயல்படும் ஒரு திரைப்படமாக இது இருக்கலாம் (என் சிந்தனைக்கு எட்டியது) என்றும் நம்பப்படுகிறது. நாளை வெளியாகவிருக்கும் பர்ஸ்ட் லுக்கிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றார்கள் என்றே கூறலாம். மேலும் வடிவேலு அவர்களின் கதாபாத்திரம் மிக மிக கனமான ஒன்றாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.