வலிமை திருவிழா : ஜூலை 15ம் தேதி வலிமை படத்தின் அப்டேட்

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் வலிமை. இதில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து ஓராண்டுக்கும் மேலாக அப்டேட் வரவில்லை. அஜித்தின் பிறந்தநாளுக்கு கூட அப்டேட் வராதது தான் ரசிகர்களை கவலையும், கோபமும் அடைய செய்தது. இந்நிலையில் வரும் 15ம் தேதி வலிமை பட அப்டேட் வருகிறது என்று கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் தலைப்பாக வலிமை இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

Advertisement

வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமையை அடுத்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜித்.