in

வலிமை குறித்து தயாரிப்பாளர் பேட்டி.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் எச்.வினோத்.

இவர், தற்போது தல அஜித்தை வைத்து வலிமை படத்தை எடுத்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில், ஹியுமா குரேஷி அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், இந்த படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள், பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.