Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்

ஆன்மிகம்

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்

ஊர் : திருப்புள்ளம்குடி

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு

மூலவர் : வல்வில் ராமன்

தாயார் : கமலவல்லி

ஸ்தலவிருட்சம் : புன்னைமரம்

தீர்த்தம் : கமலபுஷ்கரிணி.

சிறப்பு திருவிழாக்கள் : வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம் : காலை 7:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை.

இடம் : இது குடந்தை அருகே உள்ள கோயில் ஆகும். இது கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.

தல வரலாறு

கழுகுகளின் அரசனான ஜடாயு , சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது அவனிடம் சண்டையிட்டது. அப்போது ஜடாயுவை இராவணன் வாளால் வெட்டவே ,ராமா ராமா என முனங்கி குற்றுயிராக கிடந்தார். அவ்வழியே வந்த ராமர் ,லக்ஷ்மணரின் செவிகளில் முனறல் சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்தனர். இராவணன், சீதையை கவர்ந்து சென்ற செய்தியை சொல்லி ‘ஜடாயு, உயிர் பிரிந்தது. இதைக்கண்டு மனம் வருந்தி ராமர் ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்ய நினைத்தார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. ராமனுக்கு உதவி புரிவதற்க்காக சீதையின் மறு அம்சமான பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு சேர்ந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை கூறும் வகையில் இத்தலத்தில் கோவில் அமைக்கப்பட்டது.

இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது .பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 10 வது திவ்ய தேசம். பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார் .ஆனால் இக்கோவிலில் ராமர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். புதனுக்குரிய பரிகார தலம். இங்கு, பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது வழக்கத்தில் உள்ளது. ராமர், ஜடாயுவாகிய புள்ளிற்கு மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த தலமாதலால் இத்தலம் திருப்புள்ள பூதங்குடி ஆனது.

வைணவ சம்பிராதயத்தில் இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமானுஜர் அவதரித்த இத்தலத்தை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளபூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித்தார்கள். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது
வேறு தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்ற திருமங்கையாழ்வார் முன், பெரிய ஒளி தோன்றி சங்கு சக்ரதாரியாக ராமர் காட்சி கொடுத்தார். இதைக்கண்ட திருமங்கை, அறிய வேண்டியதை அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார்.ராமர் தந்தை தசரதருக்குசெய்ய வேண்டிய காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயுவிற்கு செய்ததை நினைந்து மகிழ்ந்தார். எனவே இத்தல ராமர் வல்வில் ராமன் என பெயர் பெற்றார்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top