in

அவரும் பெண்தானே.. பீட்டரின் முதல் மனைவி குறித்து வனிதா பேச்சு..!

சந்திரலோகா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிய நடிகை வனிதா, தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாமல் கடைசியாக பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலம் அடைந்தார்.

2 முறை விவாகரத்து பெற்ற இவர், தற்போது பீட்டர் பால் என்ற நபரை 3-வது முறையாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஆனால், இந்த திருமணத்தில் தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

அதாவது, பீட்டர் பாலின் முதல் மனைவி, முறையாக தன்னை விவாகரத்து பெறாமலேயே வனிதாவை திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நடிகை வனிதா, பீட்டரின் முதல் மனைவியும் ஒரு பெண் தான். அவரைப் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

அவரை குடும்பத்தினர் யாரோ தூண்டிவிட்டு ரூ.1கோடி பணம் பறிப்பதற்காக புகார் கொடுத்திருக்கிறார். அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.