Search
Search

காதல் கிசு கிசு.. Bachelor வாழ்க்கைக்கு “எண்டு கார்டு” போடுகிறாரா வரலக்ஷ்மி? – முணுமுணுக்கும் கோலிவுட்

வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழ் சினிமா அரங்கில் பெரிதாக அறிமுகம் தேவையில்லை, 38 வயதாகும் வரலட்சுமி பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. மைக்ரோ பயாலஜி பாடத்தில் பட்டம் பெற்ற வரலட்சுமி சரத்குமார் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தில் திரைத்துறையில் களமிறங்க ஆசை கொண்டார்.

முதன் முதலில் 2003ம் ஆண்டு வெளியான சங்கரின் திரைப்படமான பாய்ஸ் படத்தில் ஜெனிலியா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானது இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தந்தையின் அறிவுறுத்தலால் அந்த பட வாய்ப்பை அவர் தட்டிக் கழித்தார்.

அதன் பிறகு படிப்பில் முழு கவனம் செலுத்திய அவருக்கு 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்கள் கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் நடித்த அவர் 2016ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் பெயர் பெற்றார்.

பல ரோலில் கலக்கிய அவர் பல ஆண்டுகளாக நடிகர் விஷாலை காதலித்து வந்த நிலையில் அந்த காதல் பிரேக் அப்பில் முடிந்தது. அதன் பிறகு சிங்கிளாக வாழ்ந்து வரும் வருவிற்கு தற்போது மீண்டும் காதல் மலர்ந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கிறது.

அவர் வேறு யாரும் அல்ல வரலட்சுமியுடன் கொன்றால் பாவம் படத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் தான். சந்தோஷ் பிரதாபுக்கும் பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை, சார்பட்டா பரம்பரை உட்பட பல திரைப்படங்களில் வெகு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய ஒரு நடிகர் அவர்.

இருவரும் அவ்வப்போது தனியே வெளியே செல்வது, பொது இடங்களுக்கு ஒன்றாக செல்வது போன்ற நிகழ்வுகள் நடந்து வருவதாகவும். இருவரும் காதலித்து வருவதாகவும் தனது பேச்சிலர் வாழ்க்கைக்கு வரலட்சுமி விரைவில் எண்டு கார்டு போடுவார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.

You May Also Like