in

வாழ்த்து சொன்னது குத்தமா..? தல ரசிகர்களை கொதிப்படைய வைத்த வரலட்சுமி..!

அஜித் ரசிகர்கள் தலயை பற்றி சின்ன விஷயம் செய்தாலும் கூட, அதை வைத்து பெரும் டுவிட்டர் போரில் இறங்கிவிடுகின்றனர்.

அந்த வகையில், தற்போது, வரலட்சுமி தெரியாத்தனமாக போட்ட டுவீட் ஒன்று பெரும் வைரலாகி வருகிறது அஜித் ரசிகர்கள் மத்தியில்.

என்ன நடந்தது என்றால், தோனியின் தீவிரமான ரசிகையான நடிகை வரலட்சுமி சரத்குமார், வர இருக்கு அவரது பிறந்தநாளையொட்டி, காமன் டிபி என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

அந்த பதிவில், தல தோனி என்று குறிப்பிட்டிருந்தார். இதனை அறிந்த அஜித் ரசிகர்கள், அஜித் மட்டும் தான் தல. மற்ற யாரும் கிடையாது.

இது உங்களுக்கு தெரியாதா என்று கண்டபடி கமண்ட் செய்து வருகின்றனர். இதனைக்கண்டு, ஒரு வாழ்த்து கூறியது குத்தமா டா என்று வரலட்சுமி இருந்து வருகிறாராம்.