வீரன் பட இயக்குநர் கொடுத்த சுவாரசிய அப்டேட்.. LCU போல உருவாகும் இன்னொரு யூனிவெர்ஸ்!

மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் தான் ஏ.ஆர்.கே சரவணன். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் வீரன். இந்த திரைப்படத்தில் ஒரு சூப்பர் ஹீரோவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் பிரபல நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
கோலிவுட் படங்களை பொறுத்தவரை பெரிய அளவில் சூப்பர் ஹீரோ படங்கள் இதுவரை வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய இந்த படத்தின் இயக்குனர் சரவணன், எதிர்வரும் தன்னுடைய ஒரு திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் இந்த வீரன் கதாபாத்திரத்தை பயன்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் LCU என்ற ஒரு யூனிவெர்ஸ்சை உருவாக்கி படங்கள் எடுக்கத் துவங்கியதில் இருந்து அதைப்போலவே நிறைய திரைப்படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தான் கூறவேண்டும்.