ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கிறது. அதில் முக்கியமான பிரச்சனை பணப்பிரச்சனை. வருமானம் வருவதில்லை. அப்படியே வருமானம் வந்தாலும் கையில் தங்குவதில்லை என புலம்புவதுண்டு.
இப்படி பணப்பிரச்சனை, கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் வீட்டில் எளிய பரிகாரம் ஒன்றை செய்து வந்தாலே, பணப் பற்றாக்குறை என்ற நிலை மாறி, வீட்டில் பணம், பொருள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
ஒரு பித்தளை தாம்பூலம் அல்லது தட்டை எடுத்து, அதில் ஒரு சிறு துண்டு அளவிற்கு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். அதன் மீது சிறிதளவு நெய் ஊற்றி கற்பூரம் முழுவதுமாக நெய்யில் நனையும் படி செய்ய வேண்டும். பிறகு நெய்யில் நனைத்த கற்பூரத்தில் தீயை பற்ற வைத்து அதனை வீட்டின் நடுக் கூடத்தில் வைக்க வேண்டும்.
அந்த கற்பூரம் முழுவதுமாக எரிந்து முடிந்த பிறகு கிடைக்கும் கரி போன்ற பொருளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கரியை வெளியில் செல்லும் போது நெற்றியில் வைத்துக் கொண்டு போனால், போகிற காரியங்கள் சாதமாக நடைபெறும்.
பச்சைக் கற்பூரம், நெய் இரண்டுமே மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணு ஆகியோருக்கு விருப்பமான ஒன்றாகும். இவைகள் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவையாகும். இது பணத்தை ஈர்க்கும். கண் திருஷ்டி எதுவும் நெருங்காது.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும், சுக்கிர பகவானுக்கும் ஏற்ற நாள் என்பதால் இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைதோறும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.