வெள்ளைப்பூக்கள் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் “சின்ன கலைவாணர்” என பெயரெடுத்த காமெடி நடிகர் விவேக், இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விவேக் இளங்கோவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான விவேக், தன் மகனை பார்ப்பதற்கு அமெரிக்கா செல்கிறார். அவருடைய மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தனது மகனிடம் பேச விவேக் மறுக்கின்றார். பிறகு மகனிடம் பேசினாலும் மருமகளிடம் பேசுவதில்லை.

ஒரு நாள் விவேக் வீட்டிற்கு அருகே ஒரு பெண் திடீரென காணாமல் போகிறார். அதைத் தொடர்ந்து ஒரு வாலிபரும் கடத்தப்படுகிறார். ஒரு கட்டத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார். கடத்தியது யார்? எதற்காக அவர்கள் கடத்தினார்கள்? என்பதை விவேக் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான கதை தான் இந்த வெள்ளை பூக்கள்.

படத்தில் சார்லி தனது யதார்த்தமான நடிப்பை காட்டியுள்ளார். சார்லியின் மகளாக வரும் பூஜா அவர்தான் குற்றவாளியா என்ற சந்தேகம் தோன்றுகிறது. அதைப் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக உள்ளது.

படத்தில் பெரிதாக சொல்வதற்கு எதுவுமில்லை என்றாலும், விவேக்கின் விறுவிறுப்பான நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்று கதையை விட்டு நகர விடாமல் ரசிகர்களை கொண்டு செல்கிறது. விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாகவும், கோபமான அப்பாவாகவும் மிரட்டியுள்ளார்.

மொத்தத்தில் வெள்ளை பூக்கள் விவேக்கின் சிறப்பான நடிப்பிற்காக பார்க்கலாம்