in

நேரடியாக OTT-ல் ரிலீசாகும் வெங்கட் பிரபு படம்..! ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா..?

கொரோனா வைரஸ் காரணமாக, தியேட்டர்கள் திறக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால், தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை டிஜிட்டல் தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதுவரை, பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்கள் ரிலீசாகி உள்ளது. இந்நிலையில், நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் லாக்கப் படம் ஒடிடியில் ரிலீசாக உள்ளது.

வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், ஜுலை மாதம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து, யோகி பாபுவின் காக்டெய்ல், வரலட்சுமியின் டேனி ஆகிய படங்களும் ஒடிடியில் வெளியாக இருக்கிறது.