Home மருத்துவ குறிப்புகள் வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள். அதில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரிவதில்லை. வெந்தயத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் இதயத்தை பாதுகாக்க தேவையான சத்துக்கள் வெந்தயத்தில் உள்ளது.

வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். அதே போல வெந்தய டீ குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் பார்க்கலாம்.

வெந்தய டீ தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் சிறிதளவு வெந்தயம் சேர்த்து மூடி வைத்து 3 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு சூடு குறைந்து பிறகு அதனை வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடிக்கவும்.

இந்த வெந்தய டீ குடிப்பதால் குடல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடலில் உள்ள கழிவுகள் மற்றும் உணவுக் குழாய்களில் தங்கும் கழிவுகளை மிக எளிதாக வெளியேற்றுகிறது.

ரத்த சோகை உள்ளவர்களுக்கு வெந்தய டீ அருமருந்தாக பயன்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலி மற்றும் உடல் வலிகளுக்கு வெந்தய டீ நல்ல நிவாரணம் தரும்.

பூப்படையும் பெண்கள் வெந்தய டீ குடிப்பதால், ஹார்மோன்களை ஊக்குவிக்கும். மேலும் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

மலச்சிக்கலால் அவதிப்படுவோர் வெந்தய டீ குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை குறைப்பதற்கு வெந்தய டீ பயன்படுகிறது. அசிடிட்டி நெஞ்செரிச்சல் மற்றும் உடலில் சுரக்கும்

அதிகப்படியான அமிலத்தை தடுப்பதற்கு வெந்தய டீ பயன்படுகிறது. மேலும் இது அல்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

சர்க்கரை வியாதி டைப் 2 உள்ளவர்கள் தினமும் வெந்தய நீர் குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.