சிம்புவா இது? அடையாளமே தெரியல..”வெந்து தணிந்தது காடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சிம்பு நடிக்கும் 47 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “வெந்து தணிந்தது காடு”. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பார்ப்பவர்களையே… இது சிம்புவா என அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement

இதுவரை கெளதம் மேனன் இயக்கிய படங்களில் இந்த படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிகிறது.