வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Advertisement

வெந்து தணிந்தது காடு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை , ஹிந்தி உரிமை 25 கோடிக்கும் விற்கப்பட்டுவிட்டதாம். இதன் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
வெந்து தணிந்தது காடு படம் மூலம் படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதை ஆச்சரியமாகப் பார்க்கிறது கோலிவுட்.