இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெற்றிமாறனின் விடுதலை!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துகொண்டிருக்கும் படம் ‘விடுதலை’. இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் வேடத்தில் நடித்துவருகிறார். சூரி போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த படம் உள்ளது. ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பானது இரண்டு வாரங்களில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகள் தற்போது பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

வெற்றிமாறனின் முந்தைய படங்களுக்கும் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து வந்த வேல்ராஜ் இந்த படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படமானது இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.