“என் காதலி எங்கே?” – பரபரப்பான கிரிக்கெட் தொடரின் நடுவே கேட்ட தீபக் சஹர் – வைரலாகும் வீடியோ

டி-20 கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் போது இந்திய வீரர் தீபக் சஹர் தன் காதலி எங்கே என கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே டி-20 கிரிக்கெட் தொடர்கள் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பவுண்டரி அருகில் நின்றுகொண்டிருந்த தீபக் சஹாரை பார்த்து பார்வையாளர்கள் மத்தியில் இருந்த அவரது சகோதரி மாலதி சஹார் அழைத்துள்ளார்.

அப்போது திரும்பிய தீபக் அக்கா மட்டும் இருக்கிறாறே என்பதை கவனித்து ‘அவர் எங்கே?’ என ஹிந்தியில் கேள்வி கேட்டுள்ளார். யார் அவர் என சற்று நேரம் குழம்பிய பிறகுதான் தெரிந்தது அவர் கேட்டது தன் காதலியை என.

Advertisement

அதை தொடர்ந்து மாலதி சஹார், ‘மேலே இருக்கிறார்’ என பதிலளித்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். இந்த காதல் ஜோடியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.