in

விஜய் மிஸ் பண்ண படம்.. அஜித் நடித்து மெகா ஹிட்.. என்ன படம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில், தல, தளபதி ஆகியோரின் பெயர் கண்டிப்பாக இருக்கும். இவர்கள், இருவரும் அடுத்த முன்னணி நடிகர்கள் என்று நிலை தற்போது இருந்து வருகிறது.

இந்நிலையில், விஜய் வேண்டாம் என்று ஒதுக்கிய திரைப்படம், அஜித் நடித்து மெகா ஹிட் ஆகிய தகவல் கிடைத்துள்ளது. அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர் சரண்.

இவர் அஜித்தை வைத்து, காதல் மன்னன், அமர்க்களம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர். சுரண், முதலில் அட்டகாசம் திரைப்படத்தை விஜய்க்கு தான் கூறியிருந்தாராம்.

ஆனால், இது தனக்கு செட்டாகாது என்று விஜய் கூறியதும், சரண் அஜித்திடம் கதையை கூறியிருக்கிறார். பின்னர் அஜித் ஓகே சொன்னதும் படம் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.