எல்லாம் ரெடியா இருங்க.. 2025 ரிலீஸ் உறுதி – தயாராகும் பிச்சைக்காரன் 3!

கடந்த 2016ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியாகி, நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்ற திரைப்படம் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
பிச்சைக்காரன் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை கொண்ட இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய் ஆண்டனி ஒரு இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். பிச்சைக்காரன் படம் வெளியான போது இந்தியா முழுவதும் பண மதிப்பிழப்பு ஏற்பட்டது, அதேபோல பிச்சைக்காரன் 2 படம் வெளியானபொழுது 2000 ரூபாய் நோட்டு முடக்கப்பட்டுள்ளது ஒரு அதிசய சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் நிச்சயம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை விஜய் ஆண்டனி அவர்களே கொடுத்துள்ளார். காலம் வழி கொடுத்தால் அந்த படத்தையும் தானே இயக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முதல் இரண்டு திரைப்படங்களை போலவே, பிச்சைக்காரன் மூன்றாம் பாகமும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 படபிடிப்பு மலேசியாவில் நடந்த பொழுது கடலில் அவருக்கு ஏற்பட்ட விபத்தில், தாடை மற்றும் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார் விஜய் ஆண்டனி.