கொஞ்சமாவது நன்றியோடு இருங்க…விஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமான நேரத்தில் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. நாம் தமிழர் உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகியதும் அந்த படமும் கைவிடப்பட்டது. பிறகு விஜயுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்தார்.

Latest cinema news in tamil

இந்நிலையில், தி பேமிலி மேன் படத்தை இயக்கியவர்களின் புதிய வெப் தொடரில் நடிக்க உள்ள விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக் விஜய் சேதுபதியை கண்டித்துள்ளார்.

Advertisement

அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “தி பேமிலி மேன் 2 தொடர் மூலம் புலிகளை கொச்சைப்படுத்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களை காயப்படுத்திய அயோக்கியர்களோடு கொஞ்சிக்குலவ எப்படி முடிகிறது? வெட்கமின்றி மக்கள் செல்வன் என சுய தம்பட்டம் அடிக்க எப்படி முடிகிறது? கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி” என கூறியுள்ளார்.

ஏற்கனவே முரளிதரன் பட விவகாரத்தில் விஜய்சேதுபதியை தேச துரோகி என கடுமையாக விமர்சனம் செய்த இவர் தற்போது மீண்டும் எதிர்ப்பு தெரிவிப்பதால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.