தேசிங் பெரியசுவாமியுடன் இணைகிறார் தளபதி விஜய்?

இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள்’ படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மன் நடித்த இந்த படம் பெரும் பாராட்டை பெற்றது.

தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கப் போவதாகவும் என்றும் லைகா அல்லது ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

vijay upcoming movies

இந்நிலையில் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. தற்போது விஜய் பீஸ்ட் படத்தின் பிசியாக இருப்பதால் படப்பிடிப்பு முடிந்தவுடன் தேசிங்கு பெரியசாமி படத்தில் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயின் 66வது படத்திற்கு தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல்கள் வெளியானது.

Advertisement